செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு.. அதிரடி நீக்கம் திமுகவில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2024, 1:55 pm
seji
Quick Share

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை முடிவில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ப.சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கௌதம சிகாமணியை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் பொதுச் செயலாளர் துரைமுருகன். அம்மாவட்டத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்த புகழேந்தி மறைந்ததையடுத்து, புதிய நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் முடிந்தவுடன் நிர்வாக மாற்றத்தில் திமுக ஈடுபட்டுள்ளது. தற்பொழுது, தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட கௌதம சிகாமணி, அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார்.

Views: - 69

0

0