நல்ல கம்பெனி கொடுக்கற இளவயசு பொண்ண அனுப்பு : பெண் புரோக்கரிடம் பேசிய திமுக பிரமுகரின் ஆடியோ லீக்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 11:05 am

திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. அவ்வப்போது திமுகவை சேர்ந்த அமைச்சர்களோ, மூத்த நிர்வாகிகளோ அல்லது கவுன்சிலர்களோ என பலர் சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.

பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொண்டர் மீது கல் ஏறிந்தது முதல் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்த திமுக பேச்சாளர் சர்ச்சை பேச்சு வரை சமீபத்தில் நடந்துள்ளது.

சென்னையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த 2 நிர்வாகிகள் பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது.

திமுக ஒன்றிய செயலாளர் பெண் புரோக்கரிடம் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது திமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதிதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது கொள்ளிடம் பகுதி.

இதன் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் சேது ரவிக்குமார். இவர்தான் ஒரு பெண் புரோக்கரிடம் டீல் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. நான் சிதம்பரம் போயிருந்தேன். அங்கு 21 வயசு இளம்பெண் ஒருவர் இருக்கிறார். அனுப்பி வைக்கவா என்று கேட்க இந்த சர்ச்சை ஆடியோ தொடங்குகிறது.

அதில் பேசும் சேது ரவிக்குமார், கடந்த முறை அனுப்பியது வயதானவர் சரியாக இல்லை. இந்த முறை சிறிய பெண்ணாக வேண்டும். நல்ல இளவயசா, நல்ல பீஸா, நல்லா கம்பெனி கொடுக்குற மாதிரி அனுப்பி வை என்று கேட்கிறார். இல்லை சார் இந்த முறை நீங்கள் கேட்டது போல் இருக்கும் என்று பெண் புரோக்கர் கூறுகிறார்.

தொடரும் இந்த ஆடியோவில், தொடர்ந்து இருவரும் பேசுவது ஆபாச வகையாக இருக்கிறது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் போலீசில் இதுவரை புகார் அளிக்கப்பட்டதால் இந்த ஆடியோ ரிலீஸ் ஆனது எப்படி என்பது குறித்த தகவல் தெரிய வரவில்லை.

இந்த ஆடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், நிம்மதி எல்லாமே போச்சு என்று கூறினார். தற்போது வரை முதல்வர் ஸ்டாலினுக்கு தொல்லை தரும் வேளைகளில் திமுகவினர் இருக்கிறார்கள் என்று பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள்.

  • kamal haasan travel to america for film city ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?