சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வந்த மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன்(57) இன்று முற்பகலில் கைது செய்யப்பட்டார்.
இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வந்தவர் சாவித்திரி கண்ணன் (வயது 57). கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்டவர். தீக்கதிர், துக்ளக் போன்ற ஏடுகளில் நீண்ட காலம் எழுதி வந்தவர். தந்தி தொலைக்காட்சியிலும் சில காலம் முக்கிய பொறுப்பு வகித்தார்.
மனதில் பட்டதை அச்சமின்றி சுதந்திரமாக எழுதக்கூடிய பத்திரிகையாளர். “அறம்” இதழ் என்ற இணைய இதழின் ஆசிரியராக கடந்த மூன்று வருடமாக உள்ளார்.
அந்த இதழின் வாயிலாக மாநில, தேசிய பிரச்சனைகளை தனக்கை உரித்தான பாணியில் எழுதி வந்தார்.
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பாவிகள் அனைவரையும் பேட்டி கண்டு உண்மை நிலவரத்தை எழுதினார். இவருடைய முயற்சியின் விளைவாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்திற்கு பல அப்பாவி இளைஞர்கள் பட்ட துயரங்கள் தெரிய வந்து ஆறுதலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் கிடைக்க இவருடைய எழுத்துக்கள் காரணமாக இருந்தது.
அதே நேரத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு கண்மூடித்தனமாக ஆதரவாக இருந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து எழுதிவந்தார்.
இந்த சூழலில் இன்று முற்பகலில் சீருடை அணியாக நான்கு போலீசார் அவருடைய வீட்டிற்குள் வந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர். அவருடைய மனைவி செல்போனையும் வாங்குவதற்கு முயற்சி செய்து உள்ளனர்.
“சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்கிறோம்.”என்று அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு, கிழக்குக் கடற்கரை சாலையில் காரை செலுத்தி உள்ளனர்.
பத்திரிக்கை உலக நண்பர்கள் தொடர்பு கொண்டு காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது “கைது செய்தது,கள்ளக்குறிச்சி போலீசார்” என்று தெரிய வந்தது.
கடந்த 3 ஆம் தேதி அவருடைய அறம் இதழ் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவும் நூல் வெளியீடும் சென்னை தி.நகர், தக்கர் பாபா வளாகத்தில் நடைபெற்றது. அவரால் மிகவும் நேசிக்கப்படும் நல்லகண்ணு ஐயாவை அவ்விழாவிற்கு அழைத்து இருந்தார். உடல் ஒத்துழைப்பு தராததால் அவர் வாழ்த்து கூறியிருந்தார்.
எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்ற நிலையை கடந்து சமூகத்திற்காக செயல்படவும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சாவித்திரி கண்ணன். தமிழகம் முழுவதும் பயணித்து தமிழக விவசாயம், விவசாயிகள் நிலைமை ஆகியவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியுள்ளார்.
தன் ஆய்வின் போது, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் பெருக்கத்திற்கு உணவு முறை சீர் கெட்டுப்போனது தான் என்பதை அறிந்து, பாரம்பரிய உணவுகள் பழக்கத்திற்கு வரவேண்டும் என்று பாடுபட்டு வந்தார்.
அவர் எழுதிய “நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள்” என்ற நூல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தன் மனைவியுடன் சேர்ந்து பாரம்பரிய உணவு வகைகளை சுவையாக சமைத்து பல அரங்குகளில் காட்சியும் படுத்திக் காட்டி, இதை பழக்கத்திற்கு கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஏழை, எளிய, பாட்டாளி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மது தமிழ் நாட்டில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் எழுத்திலும் செயலிலும் பணியாற்றி வந்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.