பாலியல் புகாரில் பரபரப்பு திருப்பம்.. பிக்பாஸ் விக்ரமன் மீது 13 வழக்குப்பதிவு : ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்!!
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் லண்டனில் ஆய்வுபட்டமும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும் நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம்.
அவர் என்னை காதலிப்பதாக சொல்லி சட்டரீதியாக திருமணமும் செய்துக் கொள்ளும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். என்னை காதலிப்பதாக சொல்லியே ரூ 13.7 லட்சம் பணம் வாங்கினார். அதில் ரூ 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். மீதி ரூ 1.7 லட்சம் திருப்பி தர வேண்டும்.
என்னை காதலிப்பதாக சொல்லி மோசடி செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இநத் புகாருக்கு விக்ரமன் மறுப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில் கிருபாவும் நானும் நல்ல நண்பர்களாகவே பழகினோம். இதுதான் உண்மை. நான் அவரை காதலிப்பதாகவெல்லாம் சொல்லவில்லை. நெருக்கமான தொடர்பும் அவருடன் வைக்கவில்லை. நான் அவரிடம் 11 லட்சம் பணம் வாங்கியதாக கணக்கு காட்டினார்.
நான் ரூ 12 லட்சம் திருப்பி கொடுத்துவிட்டேன். அவருக்கு நான் எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. அவர் என் மீது கொடுத்த புகார் தவறானது. இதை நான் சட்டரீதியாக சந்திப்பேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் போலீஸார் வழக்கு செய்யாததால் நீதிமன்றத்தை நாடினார் கிருபா. இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுபடி விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 13 வழக்குகளில் முக்கியமானது பெண் வன்கொடுமை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மோசடி , நம்பிக்கை மோசடி, அவதூறாக பேசுதல், மிரட்டுவது, மிரட்டி தொந்தரவு தருவது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளும் அடங்கும்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.