அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் பரபரப்பு திருப்பம்… சிக்கும் புள்ளிகள் : குற்றப்பத்திரிகையில் 900 பேர் சேர்ப்பு…!!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 6:56 pm

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் பரபரப்பு திருப்பம்… சிக்கும் புள்ளிகள் : குற்றப்பத்திரிகையில் 900 பேர் சேர்ப்பு…!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011-15ல் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது, அந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் கூறியுள்ளது.

கடந்த 2017ல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை பதில் தெரிவித்துள்ளது. இதன்பின், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணையை பிப்.2ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் ஒத்திவைத்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 546

    0

    0