செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… சொல்றதே செய்யமாட்டீங்களா? அப்பறம் எதுக்கு இந்த வழக்கு : கடுப்பான நீதிபதி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2024, 1:56 pm

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… சொல்றதே செய்யமாட்டீங்களா? அப்பறம் எதுக்கு இந்த வழக்கு : கடுப்பான நீதிபதி!!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்பின், காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 2 முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சாட்சிகளை, ஆதாரங்களை கலைத்துவிட வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தனர். இதனால் ஜாமீன் கோரி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், 3-வது முறையாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய கோரி நீதிபதி அல்லி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இன்று இந்த வழக்கில் அமலாக்கத்துறை மூத்த வழக்கறிஞர் ஆஜராக தாமதமானதால் வழக்கு விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பதில் மனு தாக்கல் செய்ய சொல்லியும் இன்னும் செய்யவில்லை. பதில் மனுதாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்கு வழக்கு தொடர்ந்தீர்கள்? என்று நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 476

    0

    0