15 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்தது… 470 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வரும் செந்தில் பாலாஜி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2024, 10:49 am

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது

கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த புகாரில் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

இது தொடர்பாக செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுவரை செந்தில் பாலாஜியின் காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக குறிப்பாக 471 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு, இன்று ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே, காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வாசித்தது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து தீர்ப்பளித்தனர். இதனால் திமுகவினர், அவரது ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.

  • Pavithra Lokesh husband controversy 60 வயது நடிகருடன் காதலா…பண வெறியில் மனைவி…பிரபல நடிகையின் முதல் கணவர் ஓபன் டாக்..!