ஆட்சி மாறும்போது முதல் கைது செந்தில் பாலாஜிதான்… ஊழலில் கேரள அரசுடன் தமிழக அரசு போட்டா போட்டி : அண்ணாமலை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 8:48 pm

கோவை : ஆட்சி மாறும்பொது முதல் கைது மின்சார துறை அமைச்சர் தான் என பாஜக அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் நல திட்டங்கள் பெற்ற பயனாளிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களை கெளரவித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முத்ரா கடன் இத்திட்டத்தின் மூலம் பல்வேறு தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக 5 கோடியே 50 லட்சம் கழிப்பறைகள் தான் இந்தியாவில் கட்டப்பட்டு இருந்ததாகவும் ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன் 8 ஆண்டு கால ஆட்சியில் 11 கோடியே 23 லட்சம் பேருக்கு கழிப்பறைகள் கட்டி தந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது மின்சாரம் இல்லாத கிராமம் இந்தியாவிலேயே இல்லை எனவும் இதில் நாம் பெருமைப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் 67 சதவிகிதம் எல்பிஜி தற்பொழுது 99.23 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். 2023ல் இந்தியாவின் கடைசி மனிதனுக்குக் கூட வீடு இருக்கும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பிரதமர் மோடியின் 8 ஆண்டுகாலம் ஆட்சியில் ஏழை மக்களுக்குக்கான நலத் திட்டங்கள் மக்களை முன்னேற்றி வருவதாக தெரிவித்தார். மேலும் வைரஸ் தொற்று காலத்தில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி முன்னேறிய நாடுகளுக்கு இணையாக தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஏழை மக்களுக்காக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர் தொழில்நுட்பங்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் இதனால் முழுமையான பலன்கள் பயனாளிகளுக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் உக்ரைன் ரஷ்யா போரில் சிக்கிக் கொண்ட 22 ஆயிரம் மாணவர்களை காப்பாற்ற பிரதமர் தலைமையிலான அரசு அமெரிக்க ரஷ்ய அரசு அதிகாரிகளிடம் பேசி மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்ததாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஊழலை ஒழித்து வருவதாகவும் கூறினார். கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் கேரள கம்யூனிஸ்ட் செயல்பாடு குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்தார். மேலும் கேரள அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழக அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்து நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் கேரள மாநில முதல்வர் தங்கக் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளி தெரிவித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் அது குறித்து பேசவில்லை என தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து பதிவு ஏதேனும் செய்தால் இரவு 2மணிக்கு கைது நடவடிக்கை நடத்தப்படுவதாகவும் குண்டர் சட்டம் போடுவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளதாகவும் சாடினார்.

அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதனை தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிப்பதற்கு காவேரி நீர் மேலாண்மைக்கு அங்கீகாரம் கிடையாது எனவும் தெரிவித்தார். மேலும் 2020 1 முதல்வர் கூட்டத்தில் Tangedco பிஜிஆர்க்குத்தான் கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறினாரா இல்லையா என கேள்வி எழுப்பினார். மூன்று ஆண்டுகள் வேண்டுமானால் திமுக தப்பிக்கலாமே தவிர அரசு மாறும்பொழுது முதல் கைது மின்சாரத்துறை அமைச்சர் தான் என தெரிவித்தார்.

கேரள முதலமைச்சருக்கு தங்க கடத்தல்காரர் என அவர்களது மக்களை பெயர் வைத்துள்ளனர் என தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் எந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேசுவதற்கு முகாந்திரம் இல்லை எனவும் தமிழ்நாட்டில் ஒரு கூட்டணியில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுவது ஒரு ஸ்டேஜ் ஆக்டிங் போல் உள்ளதாக தெரிவித்தார். சீரடிக்கு கோவையிலிருந்து தனியார் ரயில் சேவை தொடங்கியதற்கு கருத்து தெரிவித்துள்ள டிஆர் பாலுவிற்கு எதிர்க் கருத்து தெரிவித்த அவர் அரசு ரயில்களும் சீரடிக்கு இயக்கப்படுவதாகவும் இந்த ரயிலில் செல்வது மக்களின் விருப்பம் என தெரிவித்தார்.

இதில் தவறு என சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் தெரிவித்தார். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக என்றும் தலையிடாது எனவும் தெரிவித்தார்.

  • Maharaja movie box office in China பிரமாண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 689

    0

    0