ஆளுநருக்கு எதிராக இன்று பேரவையில் தனி தீர்மானம் : முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிகிறார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 8:54 am

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார்.

அதில் தமிழக கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, ஜனாதிபதியை வலியுறுத்தி தமிழக அரசு தனித்தீர்மானம் கொண்டு வருகிறது.

தமிழக சட்டசபை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், நிறைவேறும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மத்திய அரசு, ஜனாதிபதி கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பொதுவெளியில் கவர்னர் தெரிவிக்கும் கருத்துக்கள் பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும் அது மாநில நிர்வாகத்துக்கு ஏற்புடையதல்ல அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 432

    0

    0