இளம் நடிகருக்கும் செக்ஸ் டார்ச்சர்.. ஆண்களையும் விட்டுவைக்காத மலையாள சினிமாத் துறை : ஷாக் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2024, 5:13 pm

மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளியிட்டதிலிருந்து அந்த துறை ஆடிப்போயுள்ளது.

அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்த பாலயில் குற்றங்கள் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலையாள சினிமாவில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இயக்குநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகர் நவஜீத் நாராயணன் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக பேசிய அவர், “எனக்கு நன்றாக தெரிந்த இயக்குநர் ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று என்னிடம் கேட்டார்.

பிறகு என்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் அவர் முகத்தில் அறைந்து விட்டு கிளம்பி விட்டேன் என்று தெரிவித்தார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…