பாலியல் புகார் எதிரொலி : விஜய்யின் ஆஸ்தான நண்பர் கட்சியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 10:57 am

ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருப்பவர் 21 வயது இளம்பெண்.

இவர் திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் புகார் செய்தார். அதில் நடன இயக்குனர் ஜானி பாஷாவிடம் நான் நடன கலைஞராக வேலை செய்து வந்தேன்.

அப்போது சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த படப்பிடிப்பின் போது என்னை ஓட்டல்களில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் நர்சிங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்தார் என கூறியிருந்தார்.

மேலும் படிக்க: 40 ஆயிரம் பேருக்கு தயாராகும் மட்டன் பிரியாணி : மிலாடிநபியை முன்னிட்டு மக்களுக்கு வழங்கும் இஸ்லாமியர்கள்!

இளம்பெண் நர்சிங்கி பகுதியில் வசிப்பதால் புகாரை நர்சிங்கி போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்ததோடு, போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜன சேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜன சேனா கட்சி பணிகளில் இருந்து ஜானி ஒதுங்கி இருக்க வேண்டும்.

Pawan Kalyan

அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 252

    0

    0