மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமே.. மும்பை ஐகோர்ட் அதிரடி!

Author: Hariharasudhan
16 November 2024, 4:34 pm

மனைவி 18 வயதுக்கு கீழ் இருக்கும்போது அவருடன் உடலுறவு கொள்வது குற்றமே என மும்பை உயர் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

மும்பை: கடந்த 2019ஆம் ஆண்டு மைனர் பெண்ணும், 24 வயது இளைஞரும் அருகருகே வசித்து வந்துள்ளனர். பின்னர், இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், அந்தப் பெண் உடல் அளவில் நெருக்கமாக இருக்க மறுத்து வந்துள்ளார் அப்போது தான் ஒரு கட்டத்தில் வற்புறுத்தி அந்த இளைஞர் உடலுறவு கொண்டு இருக்கிறார்.

இதில் அந்த பெண் கர்ப்பம் ஆகி உள்ளார். இதனையடுத்து, அந்த இளைஞர் மைனர் பெண்ணை திருணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும், திருணமான சில நாட்களிலேயே அந்த சிறுமியை இளைஞர் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்.

மேலும், பெற்ற குழந்தைக்குதான் தந்தை இல்லை என்றும், வேறு ஒருவருடன் அந்த சிறுமிக்கு உறவு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், 2019ஆம் ஆண்டு மே மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், இது தொடர்பான வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

CHILD MARRIAGE

எனவே, இதனை எதிர்த்து அந்த இளைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனப் தலைமையிலான அமர்வு, “நமது நாட்டில் உடலுறவுக்கு ஒப்புக் கொள்ளும் Age of Consent என்பது 18ஆக இருக்கிறது.

இதையும் படிங்க: போலீஸ் லத்தியாலே போலீசுக்கு அடி.. ராஜபாளையத்தில் பயங்கரம்.. தீவிர தேடுதல் வேட்டை!

எனவே, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்குத் திருணமாகி இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியம் இல்லை. அவருடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும். எனவே, மனைவி 18 வயதுக்குக் கீழ் இருக்கும் போது அவரது சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டேன் என்று அந்த இளைஞர் சொல்வதை ஏற்க முடியாது” எனக் கூறிய கீழமை நீதிமன்றம், அந்த இளைஞருக்கு வழங்கிய 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

  • Anupama Parameswaran love statement காதல் குறித்து மனம் திறந்த அனுப்பமா பரமேஸ்வரன்…வெளிப்படையா இப்படி சொல்லிட்டாரே..!