தனக்குத் தானே பிரசவம்.. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி : செவிலியரை கைது செய்த போலீஸ்..!!!
Author: Udayachandran RadhaKrishnan5 May 2024, 12:36 pm
தனக்குத் தானே பிரசவம்.. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி : செவிலியரை கைது செய்த போலீஸ்..!!!
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன் வினிஷாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன் வினிஷா கர்ப்பமான நிலையில், அவருக்கு சமீபத்தில் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனக்குத்தானே பிரவசம் பார்க்கும் விபரீத முடிவை எடுத்துள்ளார் வினிஷா. கழிப்பறைக்குச் சென்று, குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். குழந்தை வெளியே வருவதில் சிக்கல் எழுந்ததால், குழந்தையின் ஒரு காலை வெட்டி எடுத்துள்ளார்.
இதனால் குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து, பயத்தில் வினிஷா அலறிய சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது தோழிகள் குழந்தை உடலையும், நர்ஸ் வினிஷாவையும் மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் படிக்க: போலந்து நாட்டு பொண்ணு… கிருஷ்ணகிரி பையன்… இனிதே நடந்த டும்..டும்…டும்..!!
குழந்தையின் உடலை மருத்துவர்கள் பத்திரப்படுத்திய நிலையில், வினிஷா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி தியாகராயநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, தனக்குத்தானே பிரசவம் பார்க்க முயன்று குழந்தையை கொன்ற நர்ஸ் வினிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். 2 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.