மணல் கொள்ளையில் மீண்டும் சேகர் ரெட்டி? நடவடிக்கை எடுக்க திமுக தயக்கம்? ஆதாரத்துடன் முகிலன் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2023, 8:44 am

சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் நல ஆர்வலருமான முகிலன் கொடுத்த exclusive பேட்டியில், மீண்டும் மணல் கொள்ளையை திமுக அரசே எடுப்பது தான் வேதனை என்றும், அதே சேகர் ரெட்டி தான், பினாமிகளான வலது கரம், இடது கரம் என்று திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன், புதுக்கோட்டை பாஸ்கர் ஆகியோர் பெயர்களில் கரூரில் மட்டும் 5 இடங்களில் சட்டவிரோத மணல் கொள்ளை எடுக்க ஆரம்பித்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.

நம் இயற்கை வளத்தை பேணிகாக்க வேண்டும் என்றால் மணல் கொள்ளையை அரசும், மணல் கொள்ளையர்களும் கை விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தற்போதைய ஆட்சியே மணற்கொள்ளையையும், தாது மணல் கொள்ளை மற்றும் கிரஷர் கொள்ளைகளை மக்களிடையே சுட்டிக்காட்டி தான் வந்த்தை நினைவுபடுத்தி கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!