காவிரியை காக்க வேண்டாமா? வேகமெடுக்கும் மேகதாது பணி… திமுக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2023, 2:11 pm

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவது உறுதி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் கணடனம் தெரிவித்து வரும் நிலையில், டாக்.ராமதாஸ் அவர்களும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். தேவைப்பட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?