கோயிலுக்கு போகக்கூடாதா.. தீயசக்தி மிஷ்கினை கைது செய்யுங்க… ஹெச் ராஜா பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan4 May 2024, 1:33 pm
கோயிலுக்கு போகக்கூடாதா.. தீயசக்தி மிஷ்கினை கைது செய்யுங்க… ஹெச் ராஜா பரபரப்பு!!
சென்னையில் அண்மையில் நடன இயக்குனர் ராதிகா இயக்கிய தி ப்ரூப் (THE PROOF) படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த படத்தில் நடிகை தன்ஷிகா முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்ட விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் மிஷ்கின் பரபரப்பை கிளப்பினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, கோயிலுக்குப் போகாதீங்க தியேட்டருக்கு போங்க.. ஒரு குடும்பத்தில் 5 பேர் போய் படம் பார்க்கலைனா அது குடும்பமே இல்லை ..வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும்” என்றார்.
மேலும்,”என்னைக்காவது சிவனை பார்த்து இருக்கீங்களா? என்னை பொறுத்தவரையில் சிவாஜி கணேசன் தான் சிவன். அவர் நடிப்பில் தான் சிவனை பார்த்திருக்கிறேன். கோயில் உங்களுக்கு எதுவும் தராது. தியேட்டரில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டும், உணர்ச்சி பூர்வமான படங்களை அழுது கொண்டும் கொண்டாட்டத்துடன் பார்க்கலாம்” என பேசியுள்ளார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்பு… கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தொடர்பா..? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்..!!
இயக்குநர் மிஷ்கின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன. மிஷ்கின் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்ப்டடது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு நிர்வாகியான நிரஞ்சன் இயக்குனர் மிஷ்கின் மீது டிஜிபி அலுவலகத்திற்கு இமெயிலில் புகார் அளித்தார்.
இந்நிலையில் மிஷ்கினின் கருத்து குறித்து பாஜக மூத்த நிர்வாகியான எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” மிஷ்கின் போன்ற இந்து விரோத தீய சக்திகள் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்.” என கூறியுள்ளார்.