‘Ethics’ பற்றி எல்லாம் நீங்க பேசலாமா? சாராயத்தை நம்பியே ஆட்சியும், கட்சியும்… வெளுத்து வாங்கிய ஷியாம் கிருஷ்ணசாமி..!!
Author: Babu Lakshmanan29 அக்டோபர் 2022, 6:08 மணி
தீபாவளி டாஸ்மாக் வருமானம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதும், கருத்துக்களை தெரிவிப்பதுமாக இருந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, கிருஷ்ணசாமியின் மகனும், மருத்துவருமான ஷியாம் கிருஷ்ணசாமியும் நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து கூறி வருகிறார்.
அண்மையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் ரூ.708 கோடி மதுவிற்பனை நடந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்தார். மேலும், பொய்யான தகவலை பரப்பினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், சமீபத்தில் எழுந்த டாஸ்மாக் வருமானம் தொடர்பான சர்ச்சை குறித்து விமர்சித்து ஷியாம் கிருஷ்ணசாமி ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தெரு தெருவா அரசே சாராய கடைய திறந்துவிட்டு ‘Ethics’ பற்றி எல்லாம் நீங்க பேசலாமா? அரசு சாராயம் விற்பது அசிங்கமில்லையாம், 3 நாட்களில் 700 கோடிக்கு விற்பனை என்று சொல்லுவது அவதூறாம்! உங்க சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு எல்லாம் பயப்பட்ட நாங்க திராவிட தொடைநடுங்கிகள் அல்ல. கேவலம் மற்ற மாநிலங்களில் சாராய கடைகள் உண்டு.
ஆனால்… ஆளும் கட்சி அமைச்சர்களும் எம்.பிக்களும் சாராய ஆலையை நடத்துவது, அரசே டாஸ்மாக் கடைகளை நடத்துவது, பார்களை ஆளும் கட்சிகாரர்களுக்கே டெண்டர் விடுவது என மொத்த ஆட்சியையும் கட்சியையும் சாராயத்தை நம்பி நடத்தும் கேவலம் திராவிட மாடல் தமிழகத்தில் தான், என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு சம்பவம், நீட் விவகாரம், இந்து மதம் சர்ச்சை என பல விஷயங்கள் குறித்தும் தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் ஷியாம் கிருஷ்ணசாமி. இது அரசியல் அரங்கில் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
0
0