அரசுப்பள்ளிக்குள் நுழைந்த மக்னா யானை: பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு ஜூட்: அதிகாலையில் பரபரப்பு…!!

Author: Sudha
19 August 2024, 3:04 pm

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோக்கால், ஹெல்த் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை ஒன்று தொடர்ச்சியாக உணவு தேடி மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வருகிறது.

பகல் நேரங்களில் இந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் நடமாடுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள அரசு மாணவர்கள் தங்கும் விடுதி பகுதிக்கு யானை வந்திருக்கிறது.

அங்குள்ள பலா மரத்திலிருந்து பலாப்பழங்களை பறித்து சாப்பிட்டுவிட்டு சாலை வழியாக யானை நடந்து சென்றுள்ளது.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!