‘எங்களுக்கு ரூ.1000.. உங்களுக்கு ரூ.200 தானா..?’ சிப்காட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்ட டிராமா…. அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்…!!
Author: Babu Lakshmanan24 நவம்பர் 2023, 8:56 காலை
சிப்காட்டுக்கு ஆதரவாக வெளி ஊர்களில் இருந்து பொதுமக்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- எங்கள் விளைநிலத்தில் sipcot வேண்டாம் என்று அமைதியாக போராடிய மேல்மா விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வைத்த ஆளுங்கட்சி அடுத்த கட்டமாக அந்தக் கிராம மக்கள் அனைவரும் sipcot வேண்டும் என்று போராடுவதாக காட்டிக் கொள்ள இன்று ஒரு டிராமாவை மேல்மாவில் அரங்கேற்றி இருக்கிறார்கள்.
சினிமா வில்லன்கள் போல திட்டம் போட்டு வேறு பல ஊர்களில் இருந்து மக்களை வண்டியில் அழைத்து வந்து sipcot ஆதரவு போராட்டத்தில் அமர வைத்துள்ளனர். அவர்களில் சிலரிடம் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காக அவர்களுடன் வந்தவர்கள் போலவே பேசி இந்த வீடியோ ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ மூலம் அவர்கள் வேறு ஊர்களில் இருந்து வண்டிகளில் கூட்டி வரப்படுவதும் அவர்களுக்கு காசு கொடுப்பதாக சொல்லி கூட்டி வந்திருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. இதே போல ரெகார்ட் செய்யப்பட்ட மேலும் சில வீடியோக்கள் அறப்போர் வசம் உள்ளது.
இந்த போராட்ட டிராமா குறித்து அமைச்சர் குண்டாஸ் வேலு என்ன சொல்ல போகிறார்? யாரை ஏமாற்ற இந்த நாடகம் நடத்தப்படுகிறது? தமிழக முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றவா? உண்மை நிலவரத்தை முதல்வருக்கு தெரிவிக்க திமுகவில் ஒருவர் கூடவா இல்லை? மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தில் குண்டாஸ் வேலு செய்த மோசடிகளையும் அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையையும் முதல்வருக்கு புரிய வைப்பாரா?
விவசாயிகளின் அமைதி போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுமா? குண்டாஸ் வேலுவின் ஈகோவுக்கு விவசாயிகள் பலியாவது தடுக்கப்படுமா?, எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
0
0