காக்கிநாடாவில் சிக்கிய எஸ்ஐ-யின் ஆசைக் காதலி… முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு : விஸ்வரூபம் எடுக்கும் மோசடி விவகாரம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 March 2023, 4:20 pm
காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிக்கும் கைலாஷ் என்பவர் பெரம சாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வருகிறார்.
இவரது நகைக்கடைக்கு கடந்த 10-ந் தேதி, காரைக்கால் சின்னக் கண்ணு செட்டி வீதியை சேர்ந்த பரசுராமன் (வயது30) என்ற இளைஞர் சென்றுள்ளார்.
பரசுராமன் அங்கு 12 சவரன் தங்க செயினை எடுத்து கொண்டு பணம் தரும்படி கேட்டிருக்கிறார். கைலஷ், தனது பெரியப்பா மகன் பாலமுரளிக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்திருக்கிறார்.
உடனே பாலமுரளி, கடைக்கு வந்து நகையை பரிசோதித்தார். அப்போது, நகையின் மேல்புறம் மட்டும் 916 தங்கத்தால் முலாம் பூசி, உள்ளே செம்பு கம்பி போல் தெரிந்ததை அவர் உறுதி செய்தார்.
தொடர்ந்து, ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து, கைலாஷ் ஆலோசனை செய்தார். அவர்களின் ஏற்பாட்டின் பேரில், பரசுராமனை கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் பாலமுரளி ஒப்படைத்தார்.
போலீசார் பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் காத்திருந்தது. அதில் திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) போலி தங்க நகையை தயாரித்து விற்பனை செய்ய கொடுத்தாக கூறியிருக்கிறார்.
அந்த தகவலை அடுத்து ரிபாத் காமிலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இதுபோல் பல இடங்களில் போலிதங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யததாக திடுக்கிடும் தகவல் வெளி வந்தது.
இச்சம்பவம் காரைக்காலில் உள்ள அடகுக்கடைகள் மற்றும் வங்கி நிர்வாகத்தினரிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
இதையடுத்து இந்த வழக்கில் தீவிரமாக இறங்கிய போலீசார், போலி தங்க நகை விற்பனைக்கு மோசடி வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜேம்ஸ்பாண்ட், அவரது நண்பர் புவனேஸ்வரி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து எஸ்ஐ ஜெரோம் ஜேம்ஸ்பாண்டை நேற்று முன்திம் போலீஸார் கைது செய்தனர். புவனேஸ்வரியை தேடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக காரைக்கால் புதுத்துறையைச் சேர்ந்த மொய்தீன் (வயது 31), திருமலைராயன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(வயது 35) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் 8 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான எஸ்ஐயின் காதலியான புவனேஸ்வரியை 3 தனிப்படைஅமைத்து போலீசார் தேடி வந்தனர்.
கோவை, ஆந்திரா உள்பட பல்வேறு இடங்களில் தேடி வந்தநிலையில், ஆந்திராவின் காக்கிநாடாவில் வைத்து புவனேஸ்வரியை கைது செய்தனர்.
வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்காக தனியார் விடுதியில் தங்கியிருந்த போது கைது செய்துள்ளனர். மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
0
0