தமிழக பாஜகவுக்கு உத்வேகத்தை கொடுத்த அக்கா தமிழிசை.. சந்திப்புக்கு பின் அண்ணாமலை போட்ட பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2024, 4:45 pm

முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் அண்ணாமலை குறித்து பற்றி பேசியது இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் கிளப்ப காரணமாக அமைந்தது.

அதைப்போல, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் அப்போது அமித் ஷா தமிழிசை சௌந்தர்ராஜனை அழைத்து கண்டித்தது போலவும் ஒரு வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதனையடுத்து, அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தர்ராஜனை எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அமித் ஷா என்னை மேடையில் இருக்கும்போது அழைத்து தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கேட்டார்.

நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளைத் தீவிரமாக செய்யுமாறு என்னை அறிவுறுத்தினார். தேவையற்ற வதந்திகள் பரவுவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என விளக்கம் கொடுத்து இருந்தார். இருப்பினும், தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியது பற்றி அண்ணாமலை தரப்பில் தொடர்கள் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தும் வந்தார்கள்.

இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அண்ணாமலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டிற்கு சென்று சந்திப்பு நடத்தி இருக்கிறார். வீட்டில் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை கூறியதாவது ” இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” என அண்ணாமலை கூறியுள்ளார்.

  • Vijay TV serial actress love with CSK Player சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!