தலைவர் பதவியில் விளையாடிய சிவன்? சர்ச்சையை ஏற்படுத்திய சுயசரிதை.. சோம்நாத் எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 1:58 pm

தலைவர் பதவியில் விளையாடிய சிவன்? சர்ச்சையை ஏற்படுத்திய சுயசரிதை.. சோம்நாத் எடுத்த அதிரடி முடிவு!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவராக உள்ளவர் சோம்நாத். இவரது தலைமையின் கீழ் இஸ்ரோ சந்திராயன் 3, ஆதித்யா எல் 1 ஆகிய விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

இந் நிலையில் சோம்நாத் தனது பயணத்தை நிலவு குடிச்ச சிம்ஹங்கள் என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக வெளியிடுகிறார்.

அடுத்த வாரம் இந்த புத்தக வெளியீடு நடைபெற இருந்த நிலையில் தற்போது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தான் இஸ்ரோ தலைவராக வருவதற்கு முன்னாள் தலைவரான சிவனின் குறுக்கீடு பிரச்சனையாக இருந்ததாக அவர் கூறியதாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சோம்நாத் “நான் யார் ஒருவரையும் குறிப்பிட்டு அவர் எனக்கு தடையாக இருந்தார் என்று சொல்லவில்லை. எனக்கு பயணத்தில் பல்வேறு தடைகளை நான் சந்தித்தாக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

எனினும் இந்த சர்ச்சைகளை கலைவதற்காக புத்தக வெளியீடு தற்போதைக்கு நிறுத்தி வைக்க பதிப்பாளர்ரிடம் கூறியுள்ளேன்“ என்று தெரிவித்துள்ளார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!