சோசியல் மீடியா : கண்டிப்பா விதிமுறை வேணும் : சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி கருத்து….!!
Author: Sudha9 August 2024, 6:00 pm
சமூக ஊடகங்களின் வருகைக்கு பிறகு அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்து உள்ளது ஆரோக்கியமானது. மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளதால் முடக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறுகையில், சமூக ஊடகங்களுக்கு ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம்.ஆனால் அதனை முடக்க நினைப்பது சற்றும் சரியல்ல.
77 வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில், மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.