ராணுவ வீரர் கொலை… திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எங்கே? மக்கள் வாட்ச் பண்றாங்க : அண்ணாமலை எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2023, 6:21 pm
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று இருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 29 வயதே ஆன ராணுவ வீரர் பிரபு, திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன்.
ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை. தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியுள்ளது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பதை, பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென, தமிழ்நாடு பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
0
0