நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சி.. ஆன்மிகத்தையும், மக்களையும் பிரிக்கவே முடியாது ; ஆளுநர் ஆர்என் ரவி!!

Author: Babu Lakshmanan
24 November 2022, 5:52 pm

நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், ஆன்மிகத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மேல்கோட்டைஸ்ரீயதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சாமி தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

rn ravi - updatenews360

அப்போது அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமி ஆகும். பாரத மாதாவின் பாதங்கள் படிந்துள்ள பகுதியாகவும், தேவி அன்னையின் அருளாட்சி நிறைந்த பகுதியாகவும் முக்கடல் சங்கமிக்கும் இடமாகவும் கன்னியாகுமரி உள்ளது. விவேகானந்தர் தேசத்தின் பார்வையில் படுவதற்கு முன்பு அவரது வருகை கன்னியாகுமரியில் இருந்தது.

இருமகான்கள்- பாக்கியம்

பின்னர் அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை இந்தியாவின் தர்மம் மற்றும் அறத்தை உலகிற்கு சொல்லும் விதமாக அமைந்தது. எனது(கவர்னர்) கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த இரு மகான்கள் ஸ்ரீ ராமானுஜர், மற்றொருவர் விவேகானந்தர் ஆகும். தற்போது அவர்களது அருள் நிறைந்த விவேகானந்தர் கேந்திராவில் நடைபெறும் ராமானுஜர் விழாவில் கலந்து கொண்டதை பெருமையாக உணர்கிறேன்.

rn ravi - updatenews360

இந்த சமூகத்திற்கு அமைதியை கொண்டு வர வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். அவரது பணிகள் இந்தியாவில் ஆன்மிக புரட்சியை உருவாக்கியுள்ளது. மதத்தின் திறவுகோல்களாக ராமானுஜர், விவேகானந்தரும் இருந்தார்கள். உலக மக்கள் அனைவரும் இவர்களது அருமை உணர்ந்துள்ளளார்கள்.

தீவிரவாதம் உருவாக்க முயற்சி

விவேகானந்தர் தன்னை புதிய மனிதர் என்று அறிந்த அதே இடத்தில் தான் இந்த நிகழ்வில் பங்கேற்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம். இறை நம்பிக்கை மட்டுமே தெய்வீக குடும்ப சூழ்நிலை உருவாகும் உருவாக்கும். இந்த உரிமைகளை பாரத நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டில் தீவிரவாத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடியாது. ஆன்மிகத்தை, மக்களையும் பிரிக்க முடியாது.

rn ravi - updatenews360

இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால், தீவிரவாதம் அடிபணிந்து இருக்கும். நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் கையில் உள்ளது. அவர்களுக்கு கல்வி மிக முக்கியம். நமது நாட்டின் வளர்ச்சி பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம், என்ஜீனியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது நாட்டு மக்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.

ஆன்மிக சிந்தனை- தர்மம்

ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் பலம். நமது நாட்டின் கலசாரத்தை பல வெளிநாட்டினரும் பின்பற்றி வருகிறார்கள். அதற்கு காரணம் ஆன்மிக சந்தனை, தர்மம் உள்ளிட்டவற்றை நாம் அடிக்கிகொண்டே போகலாம். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா அனைத்திலும் தன்னிறைவு பெற்று முதன்மை நாடாக முன்நிற்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, இவ்வாறு கவர்னர் கூறினார்.

rn ravi - updatenews360

இதனைதொடர்ந்து ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாடக நாட்டியம், ராமர் பிறப்பு நாடகம் உள்ளிட்ட கைல நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய் சுந்தரம் , கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமானுஜா் சிலை திறப்பு

நிகழ்ச்சியின் 2-வது நாளான நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு பிரதிஷ்டாபன ஹோமம், ராமானுஜர் பாராயணம் மற்றும் மாநாடு நடக்கிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் செய்துள்ளது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1004

    0

    0