தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் திமுகவினருக்கும் பொதுமக்களுக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இனிப்புகளை வழங்கினார், நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும் நிலையில் அதன் முடிவுகளை கருத்து கணிப்பு எனும் பெயரில் முன்கூட்டியே கூறுவது ஏற்புடையதல்ல.
5 அல்லது 6 கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களை வைத்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது, ,இந்திய வரலாற்றில் நடக்காத வகையில் மூன்று மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
கருத்துக் கணிப்புகள் எடுத்த நிறுவனங்கள் அச்சடித்தது போல ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளன, அறிவு சார்ந்த மக்கள் கருத்துக் கணிப்பு முடிவுகள் நம்ப முடியாதவையாத வகையிலும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் உண்மையும், ஞானமும் இல்லை, ஒரு மாநிலத்தில் பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அம்மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அம்மாநிலத்தில் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது,
யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, நாளை வெளிவரும் தேர்தல் முடிவுகளுக்கும் கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமில்லாத வகையில் முடிவுகள் வெளிவரும், நாளை வெளிவரக்கூடிய தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்” என கூறினார்
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.