மக்களே குட் நியூஸ்… தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கப் போகுதாம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Author: Babu Lakshmanan
14 May 2024, 6:45 pm

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: கஞ்சா விற்பனை குறித்து புகார் … குடும்பத்தையே தீர்த்து கட்ட முயன்ற கஞ்சா ஆசாமிகள் ; அதிர வைக்கும் வீடியோ!!

வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.அதனை தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கும். ஜூன் 1-ந்தேதி கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி விடும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.தென்மேற்கு பருவமழையின்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!