அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு… CM ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

Author: Babu Lakshmanan
3 September 2022, 10:13 am

கேரளாவில் இன்று நடக்கும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இதில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பினராயி விஜயன் (கேரளா), பசவராஜ் பொம்மை (கர்நாடகம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகரராவ் (தெலுங்கானா) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், தலைமைச்செயலாளர்களும், முதன்மைச் செயலாளர்களும், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் பொதுவான பிரச்சினைகளான நதிநீர் பகிர்வு, கடலோர பாதுகாப்பு, இணைப்பை ஏற்படுத்துதல், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் எல்லை தொடர்பாக பிரச்சினைகள், பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில், நீர், எரிசக்தி, காடு, சுற்றுச்சூழல், வீட்டு வசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…