சும்மா விட மாட்டேன்: இதுக்கு ஒரு முடிவு கட்டுவேன்: சீமானை சாடிய எஸ்.பி…!!

Author: Sudha
18 August 2024, 5:13 pm

தனது குடும்பத்தினர் குறித்து தரக்குறைவாக கருத்து பதிவிடும் நாம் தமிழர் கட்சியினரை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் விடமாட்டேன் என திருச்சி எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திருச்சி எஸ்.பி வருண்குமார் இடையேயான வார்த்தை மோதல் வலுத்து வரும் நிலையில், அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பியுமான வந்திதா பாண்டே பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள எஸ்பி வருண்குமார், வெளிநாடுகளில் இருந்து போலி ஐடிக்களில் இயங்குபவர்களை விடப்போவதில்லை எனவும், ஆபாசத்திற்கும் அவதூறுக்கும் முடிவுரை எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நாம் தமிழர் கட்சயின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!