பொதுக்கூட்டத்தில் பேசும் போது நாகரீகமா பேசுங்க.. அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 7:58 pm

பொதுக்கூட்டத்தில் பேசும் போது நாகரீகமா பேசுங்க.. அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!

தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் அன்றே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கோவில்கள், சர்ச்கள், மசூதிகள், குருதுவாராக்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்குள் சென்று தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. மீறினால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதேபோல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், எந்தவித புதிய நலத்திட்டங்களுக்கான அறிவிப்போ, அரசாணைகளோ வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசுத்துறைகளின் செயலாளர்களுக்கு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 193

    0

    0