மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறது என்றும், ஆனால், விவசாய கடன், மாணவர் கல்வி கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது என சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறு குறு தொழில் தொடங்குவதற்கு ஒற்றை சாரள முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது எனவும், இயந்திரங்கள் வாங்கிட தமிழ்நாடு அரசு சார்பில் 25% மானியம் வழங்கப்படுகிறது எனவும் பேசிய அவர், நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டசபையில் எதிர்கட்சி துணை தலைவர் நாற்காலி தொடர்பாக பிரச்சனை இல்லை என்றும், எதிர்கட்சி தலைவர் நாற்காலியை தவிர பிற இடங்கள் ஒதுக்குவது சபாநாயகரின் உரிமை என ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளதை அப்பாவு நினைவு கூர்ந்தார்.
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறது என்றும், ஆனால், விவசாய கடன், மாணவர் கல்வி கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது என குற்றம் சாட்டிய அப்பாவு, உலக பணக்காரர் வரிசையில் உள்ள அதானிக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி தேவையா என கேள்வி எழுப்பிய அவர், நலிந்த நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார். முதல்வராக இருந்த போது குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா என மோடி கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது மாநிலங்களுக்கு தேவையான நிதியினை முறையாக வழங்கினாரா எனவும் வினவினார்.
தேர்தல் கருத்து கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்பாவு, தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதால் திமுக கூட்டணி முழுமையாக வெல்லும் எனவும், 50 ரூபாய்க்கு பெட்ரோல் வழங்குவதாக கூறி 110 ரூபாய்க்கு விற்கிறார்கள் எனவும், 450 ரூபாய் இருந்த சிலிண்டர் 1100 ரூபாய் விற்கும் நிலையில் மீண்டும் மக்கள் வாக்களிப்பார்களா? எனவும், வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதை எப்படி நம்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.