தொடர் விடுமுறை… சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டும் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 10:31 am

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து இன்று முதல் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் என அடுத்தடுத்து வருவதால், நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து வெளியூர்கள் மற்றும் சொந்த ஊர்கள் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, பயணிகளின் வசதிக்காக, கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டிருந்தது.

அதன்படி, இன்றும், நாளையும் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவை, சேலம், நாகை, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்.17-ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!