நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்… மத்திய அரசு போட்ட பிளான் : வியூகம் அமைக்கும் திமுக!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2023, 6:29 pm

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்… மத்திய அரசு போட்ட பிளான் : வியூகம் அமைக்கும் திமுக!!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் முழுமையாக இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனால் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி