சென்னை : விளையாட்டுத் துறையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் என்று திமுகவினர் கூறி வந்த நிலையில், அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, ஜிஎஸ்டி தொகை வழங்குவதில் ஓரவஞ்சனை செய்வதாகவும் திமுக தலைமையிலான தமிழக அரசு கூறியிருந்தது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கூட, நிலுவை தொகை ஏதும் வழங்கப்படத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
மத்திய அரசு மீது திமுக குறை சொல்வதும் அதற்கு பாஜகவினர் ஆதாரங்களுடன் விளக்கமளிப்பது தொடர்ந்து வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக திமுக நாடாளுமன்ற எம்பிக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதாவது, குஜராத்திற்கு ரூ.608 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.503 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழகத்திற்கு வெறும் 33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுகவினரின் இந்தக் குற்றச்சாட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- Khelo India திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.
ஆனால் இந்த திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல், தெரிந்து கொள்ள எந்தவித முயற்சியையும் எடுக்காமல் பொய்களைப் பரப்பி வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு.
இது ஒரு Demand driven திட்டம். மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதி பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர்.
மாநில பட்டியலில் உள்ள விளையாட்டுத் துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது, அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை, எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.