நள்ளிரவில் இலங்கையில் இருந்து வந்த கள்ளத்தோணி : தனுஷ்கோடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்.. விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 10:38 am

நள்ளிரவில் இலங்கையில் இருந்து வந்த கள்ளத்தோணி : ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பயணம்… விசாரணை!!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஏழு பேர் நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு கள்ளத்தோணியில் வந்த இலங்கைத் தமிழர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் 4 வயது பெண்குழந்தை உட்பட 7 பேர் மன்னார் துறைமுகத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்டு நள்ளிரவு 1 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

தகவல் அறிந்த மெரைன் போலீசார் மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!