காஞ்சிபுரம் ; நான் உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு அசிங்கப்படுகிறேன், பிரபல ரவுடி குணாவின் மனைவிக்கு ஓட்டு போட்டு இருந்தால் அவர்கள் என்னுடைய பகுதிக்கு ஏதாவது செய்திருப்பார்கள் என ஒன்றிய கவுன்சிலர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று 9வது ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரான, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் எஸ்டி.கருணாநிதி தலைமை தாங்கினார்.
15 பேர் கொண்ட இந்த ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலரும், ஸ்ரீபெரும்புதூர் விசிக கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளருமான தியாகராஜன் கலந்து கொண்டு, இன்று நிறைவேற்றப்படுகிற தீர்மானத்தில் நான் கையொப்பமிடமாட்டேன்.
நான் வெளியே போய் விடுகிறேன். இங்கே இருக்கிறவர்களிடத்தில் நீங்கள் கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எனக்கு கவலை கிடையாது. நான் நோட்டீஸ் அடித்து என்னை வெற்றி பெற செய்த மக்களிடத்தில் நான் கவுன்சிலருக்கு லாயக்கே கிடையாது. என்னை நம்பி எனக்கு நீங்கள் தப்பா ஓட்டு போட்டு விட்டீர்கள். நான் வேஸ்ட்ங்க, உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் பெருந்தலைவர் மற்றும் BDO ஆகியோரை பார்த்துக்கோங்க என கூற போகிறேன்.
ஒன்றை வருடமாக ஒன்றிய சேர்மன் திமுக கட்சியை சேர்ந்த கருணாநிதி , எனக்கும், என் வார்டுக்கும் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் உங்கள் கட்சிக்கும், உங்கள் ஜாதிகாரர்களுக்கும் தான் சப்போர்ட் பண்ணுகிறீர்கள். என்னை ரொம்ப கேவலமாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டு சேர்மன் ஆக்குன என்னை கேவலமாக பார்க்கிறீர்கள். மக்கள் என்னை ஓட்டுப் போட்டு வர வைத்திருக்கிறார்கள். நான் சும்மா இங்கே வரவில்லை. அடுத்து நடக்க இருக்கின்ற மீட்டிங்களுக்கும் நான் வரப்போவதில்லை.
நான் உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு அசிங்கப்படுகிறேன். உங்களுக்கு எதிராக நின்ற பிரபல ரவுடி குணாவின் மனைவிக்கு ஓட்டு போட்டிருந்தால் அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்து இருப்பார்கள். என்னுடைய பகுதிக்கு ஏதாவது நல்லது செய்திருப்பார்கள். ஒன்றிய கவுன்சிலர் கூட்டமும் களைகட்டி இருக்கும், என்று பேசியது ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஒன்றிய கவுன்சிலர் தியாகராஜன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஒன்றிய சேர்மன் கருணாநிதி எதையும் கண்டு கொள்ளாமல் வெளியே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.