அதிமுகவால் ஸ்டாலின், உதயநிதிக்கு தூக்கம் போச்சு.. முதுகெலும்பு யாருக்கு இருக்குனு மோதி பார்க்கலாமா? இபிஎஸ் அதிரடி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2024, 9:37 pm

அதிமுகவால் ஸ்டாலின், உதயநிதிக்கு தூக்கம் போச்சு.. முதுகெலும்பு யாருக்கு இருக்குனு மோதி பார்க்கலாமா? இபிஎஸ் அதிரடி பேச்சு!

லோக்சபா தேர்தலையொட்டி விருதுநகர் தே.மு.தி.க, வேட்பாளர் விஜயபிரகரனை ஆதரித்து சிவகாசி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிச்சாமி பேசியது, ஸ்டாலினும், உதயநிதியும் செல்லும் இடமெல்லாம் என்னைபற்றியே பேசுகின்றனர். அ.தி.மு.க., வளர்ச்சியால் அவர்களுக்கு தூக்கம் போயிவி்ட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் செல்லும் இடமெல்லாம் என்னைபற்றியே பேசுகின்றனர்.

அ.தி.மு.க., வளர்ச்சியால் அவர்களுக்கு தூக்கம் போயிவி்ட்டது. தன் கட்சிக்காரர்கள் என்ன அட்டூழியம் செய்கிறார்கள் என்பதை ஸ்டாலினே பொதுக்கூட்டத்தில் ஒப்புக்கொள்கிறார். தி.மு.க, விடம் 38 எம்.பி.க்கள் இருந்தும் இங்கு பட்டாசு தொழில் பிரச்னையில் உள்ள தடைகளை நீக்க எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.

மாறாக இங்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ஸ்டாலின் ,பட்டாசு பிரச்னையால் பாதிக்கப்பட்டு தொழில் நசிவை சந்தித்து வரும் வேளையில் மக்கள் கடும் அவதி படுகின்றனர். அவர்களை பார்த்து நீங்கள் நலமா என கேட்கிறார் ஸ்டாலின் என விமர்சித்தார்.

நலலாட்சி நடத்துவதற்காகவே திமுகவிடம் மக்கள் ஆட்சி அதிகாரத்தை தந்தார்களே தவிர எங்கள் மீது பொய்வழக்கு போடுவதற்காக அல்ல. தம்மீது போடப்பட்ட வழ்க்கை திரும்ப பெறுவதாக முனுதாரர் கூறிய பின்னரும் வழக்கை நடத்தி நிரபராதி என தீர்ப்பு பெற்றேன்.

மடியில் கனமில்லாததால் பயமில்லை எங்கள் மீது போடப்பட்ட வழக்கை முறியடிக்கும் அளவுக்கு முதுகெலும்பு உள்ளது. அதே போல் அதிமுக அளித்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு முதுகெலும்பு உள்ளதா ? இவ்வாறு அவர் பேசினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 222

    0

    0