அண்ணாமலை… பந்தை சிக்ஸருக்கு அடித்து அமர்க்களம் ; நடைபயணத்தின் போது கிரிக்கெட் விளையாடி குதூகலம்!!

Author: Babu Lakshmanan
14 August 2023, 11:01 am

தூத்துக்குடி அருகே நடைபயணத்தின் போது இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மகிழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

மேலும், இந்த நடைபயணத்தின் போது, மத்திய அரசின் சாதனைகளை சொல்வதோடு, திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அவர் விளையாடிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பகிரும் பாஜக தொண்டர்கள், டி20 பேட்டர்களின் நம்பர் 1 வீரரான சூர்யகுமார் யாதவை மிஞ்சும் விதமாக இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர்.

அதிலும் சிலரோ, சூழல் பந்து வீச்சில் முதலமைச்சர் ஸ்டாலின் வல்லவர் எனக் கூறிய உதயநிதியின் கருத்துக்களை வைத்தும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 550

    0

    0