ஆ.ராசா பேசியது பச்சைப்பொய்… திமுக வண்டியே இந்த ஒரு காரணத்துக்காகத்தான் ஓடுது ; அண்ணாமலை குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
17 December 2022, 5:45 pm

தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அன்னூர் பகுதியில் ஏற்கனவே தனியார் நிறுவனம் வாங்கி வைத்துள்ள தரிசு நிலம் கையகப்படுத்தப்படும் என்கிற அரசின் அறிவிப்பை பாஜக வரவேற்கிறது. விவசாயம் பற்றி ஆளும்கட்சி உணர்ந்திருப்பது மகிழ்ச்சி. தவறாக கொடுக்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

அண்ணாமலைக்கும் அ.ராசாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும், டிட்கோவை வைத்து தண்ணீரை குறிவைத்து நிறுவனங்கள் வருகிறது. ஆ.ராசா அதை புரிந்து கொள்ள வேண்டும். கோவை கார் வெடிவிபத்து என்ஐஏ விசாரணை திருப்திகரமாக உள்ளது. உதயநிதி அமைச்சரான பிறகு பல்வேறு கருத்துக்களை திமுகவினர் கூறி வருகின்றனர்.

உதயநிதிக்கு திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும். திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வதுதான் ஒரே வேலை. கட்சிகள் கூட்டணி குறித்து கட்சி தலைவர்கள் பேசினால் பொருத்தமாக இருக்கும். பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.

2024 தேர்தல் மோடிஜிக்கான தேர்தல். தமிழகத்தில் மற்ற சினிமா தயாரிப்பாளர்கள் பிழைக்க வேண்டுமா, வேண்டாமா?. அதிகாரத்தை வைத்து திரைத்துறையை ஒரு பக்கம் வைக்கக்கூடாது. மேலும் தமிழக காவல்துறை மிகவும் புத்திசாலித்தனமானது. காவல்துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளது. ரபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து 500 கைக்கடிகாரங்கள் செய்யப்பட்டது.

அதில் ஒன்றை நான் வாங்கியுள்ளேன். 149வது கடிகாரம் என்னுடையது. நான் தேசியவாதி. என் உயிர் உள்ளவரை இந்த கடிகாரம் என் கையில் இருக்கும். மேலும், அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. பாஜகவை பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய – திராவிடம் என்கிற பிரிவினையை ஏற்காதவன் நான்.

டேண்- டீ ஆரம்பித்தது லாப நோக்கிற்காக அல்ல. இலங்கையில் இருந்து வந்த மலையக தமிழர்களின் நலனுக்காக துவங்கப்பட்டது. ஆ. ராசா அதனை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக சார்பில் 9 புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்துள்ளோம். அரசின் அழுத்தத்தால் வழக்கு இல்லாமல் போகிறது. தற்போதும் ஆ.ராசா 2 ஜி குற்றவாளி என்பதை மறந்து விடக் கூடாது.

தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் தமிழக முதல்வர்தான். அரசாணை மூலம் விவசாயிகளை எந்த வகையிலும் நிர்பந்தம் செய்யக்கூடாது. நீர், நிலத்தை மாசுபடுத்தாத நிறுவனங்கள் மட்டுமே என அரசு தெரிவித்துள்ளது. அதனை திமுக காப்பாற்ற வேண்டும். அரசு அறிவிப்பை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அ.ராசா செய்தியாளர்களிடம் பேசியது பச்சை பொய். வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது. பாஜக தொடர் போராட்டங்களை கையில் எடுக்கும். திமுக அரசு பிரஞ்ச் புரட்சி ஏற்பட்டதற்கு நிகராக உள்ளது. ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வை மக்கள் சந்திக்கின்றனர்.

அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்கு செல்கிறது. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுக அமைச்சர் ஒருவரின் பால் நிறுவனம் ஊக்குவிக்கப்படுகிறது, எனக் கூறப்படுகிறது, எனக் கூறினார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…