இதுக்கு மேல போன கலவரம் வெடிக்கும் பிரதமர் மோடியை தடுத்து நிறுத்துங்க.. ஐகோர்ட்டில் செல்வப்பெருந்தகை போட்ட வழக்கு

Author: Babu Lakshmanan
8 May 2024, 12:42 pm

பிரச்சாரத்தின் போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு போட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தாக்கல் செய்த மனுவில்: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் தேர்தல் பரப்புரையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி மத கலவரத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார்.

மேலும் படிக்க: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை… CM ஸ்டாலின் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய இபிஎஸ்

தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து தவறான கருத்துகளை பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பிரதமர் பெயரை சேர்த்திருப்பதால் வழக்கை பட்டியலிட மறுப்பதாக காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் புகார் தெரிவித்தனர். பின்னர், மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu