உட்கட்சி பூசல்; ராஜினாமா செய்த கோவை, திருநெல்வேலி மேயர்கள்; உடனே தேர்தல்; உத்தரவு பிறப்பித்த மாநில தேர்தல் ஆணையம்

Author: Sudha
26 July 2024, 12:10 pm

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு, 2022 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்டது.

மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மறைமுக தேர்தல் வாயிலாக, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்தனர்.கோவை மேயராக கல்பனா, திருநெல்வேலி மேயராக சரவணன் ஆகியோர், தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனால், கட்சி தலைமை அறிவுறுத்தல்படி தங்கள் பதவிகளை, இம்மாதம் 3ம் தேதி ராஜினாமா செய்தனர். இவ்விரு பதவிகளும் தற்போது காலியாக உள்ளன.

திருநெல்வேலி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியும் கோவை மேயர் தேர்தலை 6ம் தேதியும் நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். அதேநாளில், காலியாகவுள்ள பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு, மறைமுக தேர்தலை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!