வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் : கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2023, 1:58 pm

சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வந்து சேர்ந்த வந்தே பாரத் வர்ஷன் 2 ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் இரண்டு பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்தன.

ரயில் பெட்டிகள் மீது கல்வீசி தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ள விசாகப்பட்டினம் ரயில்வே போலீசார்.

விசாகப்பட்டினம்-செகந்திராபாத் இடையேயான வந்தே பாரத் வெர்ஷன் 2 ரயில் போக்குவரத்தை இம்மாதம் 19ஆம் தேதி செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் வந்தே பாரத் வெர்ஷன் 2 அதிவேக ரயில் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தது. இடையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் ரயிலின் இரண்டு பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள விசாகப்பட்டினம் ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!