அரசுப்பள்ளிகளில் LKG சேர்க்கை நிறுத்தம்?…அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 8:26 pm
School Education LKG UKG - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கிராமப் பகுதி ஏழை மக்களிடம் கூட LKG, UKG வகுப்புகளில் தங்களுடைய
குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கவேண்டும் என்கிற எண்ணம் பெற்றோரிடம் தீவிரமாக வலுப்பெற்றுள்ளது.

குழந்தைகளை LKG UKG படிக்க வைக்கும் பெற்றோர்கள்!!

நாம் என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, நம் பிள்ளைகளை LKG, UKG வழியில் படிக்க வைப்பதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கும் நல்லது என்று கருதி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை நோக்கி அவர்கள் படையெடுக்கிறார்கள்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய நிலைமை தமிழகத்தில் காணப்படுகிறது.

அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள்

இந்த நிலையில்தான் ஏழை மக்களின் கவலையைப் போக்கிடும் வகையில் முந்தைய அதிமுக அரசு 2019-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளான LKG, UKGயை தொடங்கி வைத்தது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் கீழ், 2019-20ம் கல்வியாண்டு முதல் LKG, UKG மாணவர்களுக்கு சேர்க்கையும் நடத்தப்பட்டது.

அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள்  வினியோகத்தில் முறைகேடு? || egg distribution abuse in school students and  anganwadi childrens

முதற்கட்டமாக, மாவட்டம் தோறும் மாதிரி மேல்நிலை பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு, அங்கு, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இணைக்கப்பட்டன. மேலும், LKG, UKG வகுப்புகளும் தொடங்கப்பட்டன. அதன்படி, மொத்தம் 2,381 அங்கன்வாடிகளில் கல்வி கற்று வந்த சுமார் 53 ஆயிரம் மாணவர்கள் நேரடியாக LKG, UKG வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர்.

வரவேற்பை பெற்ற அரசு LKG, UKG வகுப்புகள்

இந்த பள்ளிகளுக்கான வகுப்பறைகள் சிறப்பான கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு, மாணவர்களுக்கு சீருடை, காலணி போன்றவையும் இலவசமாக வழங்கப்பட்டது. தவிர பிஞ்சு குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்க தொடக்க கல்வி இயக்ககம் சார்பில், இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு: நெயில்பாலிஸ் போட தடை - வழிகாட்டு  நெறிமுறைகள் இதோ | Anganwadi Centers: Govt Prohibition of Nail Polish - Here  are the guidelines - Tamil Oneindia

இதனால் தனியார் பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க முடியாத ஏழைப் பெற்றோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்களிடம் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகளில் அங்கன்வாடி மையங்களை அதிகரித்து LKG, UKG வகுப்புகளில் அதிக அளவில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் முன் வைக்கத் தொடங்கினர்.

In Anganwadi centers 60 thousand children benefit || அங்கன்வாடி மையங்களில்  60 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்  தகவல்

LKG, UKG வகுப்புகளுக்கு முழுக்கு போட்ட திமுக அரசு?

இந்தநிலையில் கடந்த வாரம் அரசுப்பள்ளிகளின் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்பட்டு வரும் மழலையர் வகுப்புகள் அனைத்தையும் தமிழக அரசு மூடப் போவதாக ஒரு தகவல் வெளியானது.

அங்கன்வாடி மையங்களில் வேலை... உடனே விண்ணப்பியுங்கள் !

அதாவது, வரும் கல்வியாண்டில் இருந்து இந்த பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது ஏழைகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்கள் திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர்.

தொடக்க கல்வி இயக்ககம் விளக்கம்

ஆனால் இதற்கு தொடக்க கல்வி இயக்ககம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இந்த வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களை பணியமர்த்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கன்வாடிகளில் செயல்படும் LKG, UKG வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று விளக்கமும் அளித்தது.

அந்த அறிக்கை நாங்க அனுப்பவில்லை" பள்ளிக் கல்வித் துறை விளக்கம் - TN School  education department explains about Statement on usage of social media and  Schools

ஆனால் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் கூட அரசுப்பள்ளிகளின் அங்கன்வாடி மையங்களில் LKG, UKG மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் முடிவால் பெற்றோர்கள் ஏமாற்றம்

இதனால் பதற்றத்திற்கு உள்ளான ஏழை எளிய மக்கள் பலரும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க தொடங்கி விட்டனர். பிப்ரவரி மாதமே தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துவிடும். அதனால் இனியும் தாமதித்தால் இடம் கிடைப்பதில் சிக்கல்தான் ஏற்படும். நன்கொடையாக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை தண்டம் கட்ட வேண்டி இருக்கும் என்று பயந்து போய் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள LKG, வகுப்புகளை மட்டும் மூட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து LKG வகுப்பு நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒன்றாம் வகுப்புக்கு மேற்பட்ட பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

School Education Department announces reduction of subjects by up to 50 per  cent for school students || பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதம் வரை பாடங்கள்  குறைப்பு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஏற்கனவே பணியாற்றிய இடங்களுக்கே, அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருவதாகவும் பள்ளிக்கல்வி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக, வரும் கல்வி ஆண்டுக்கான LKG மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

கல்வியாளர்கள் கருத்து

இதுபற்றி கல்வியாளர்கள் கூறும்போது, “நடப்பு கல்வி ஆண்டு முடிந்ததும், அரசு பள்ளிகளில் LKG வகுப்புகளை மூடிவிட்டு, சமூக நலத்துறையின் அங்கன்வாடிகளே மீண்டும் LKG வகுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கேள்விப்படுகிறோம்.

ஆசிரியர்கள் சொத்து கணக்கு: தமிழக பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு

இதனால் இவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து LKG படிக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் 14 வயதுக்கு உட்பட்ட 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறது.

வேண்டுகோள் நிறைவேறுமா?

ஆனால் இந்த கட்டணத்தை சுயநிதி பள்ளிகள் பொருட்படுத்துவதே இல்லை. ஏழைக் குடும்ப மாணவர்களின் விண்ணப்பங்களை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிராகரித்து விடுகின்றனர். கணக்கில் வராமல் வேறு வழிகளில் கூடுதல் பணம் கொடுத்தால் மட்டுமே LKG, UKG, ஒன்றாம் வகுப்பு வரை சேர்ந்து படிக்க முடியும். இது ஊழல் மற்றும் கல்வி கட்டண கொள்ளைக்குத்தான் வித்திடும்.

பள்ளிகளை திறக்க, செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்..? பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை. | Arrangements to be made to open schools  ..? School Education ...

எனவே இந்தாண்டு அரசுப் பள்ளிகள் நடத்திவந்த LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும். ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையை இழந்தது மட்டுமின்றி தங்களுடைய வாழ்வாதாரத்தையும் தொலைத்து விட்டனர். அதனால் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள இந்த முடிவை கைவிட வேண்டும்” என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். நல்ல வேண்டுகோள்தான்!

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1644

    0

    0