மணல் கொள்ளையை உடனடியாக தடுங்க… கொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி வலியுறுத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan26 ஏப்ரல் 2023, 9:36 காலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். இவர் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்தபோது 2 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து லூர்து பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.
பின்னர் அவர்களும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் லூர்து பிரான்சிஸ் மகன்கள் அஜேய் ஆல்வின், மார்ஷல் ஏசுவடியான் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, மணற்கொள்ளையைத் தடுப்பதற்காகச் சமரசமின்றி துணிச்சலுடன் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட உத்தரவிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. இயற்கை வளங்களை அழித்திடும் மணற்கொள்ளை போன்ற சீர்கேடுகளை உடனடியாக தடுத்திடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
0
0