ரஜினிக்கும் துரைமுருகனுக்கும் நடுவில் சிக்கித் தவித்தேன்.. உண்மையை போட்டுடைத்த வைரமுத்து!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 11:05 am

வேலூர் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகமும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றமும் இணைந்து விஐடி வேந்தர் ஜி .விஸ்வநாதன் தலைமையில், இன்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது .

நிகழ்ச்சி மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மக்களவை உறுப்பினர் கனிமொழி, முரசொலி செல்வம்,கவிஞர் வைரமுத்து மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் கவிஞர் வைர முத்து பேசுகையில், நேற்று இரண்டு நகைச்சுவை முட்டிக் கொண்டது. நான் இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தேன்.

ரஜினி என் திரை துறையில் நெருக்கமான நண்பர். துரைமுருகனும் என் நண்பர். ரஜினி ஒரு நகைச்சுவை சொன்னார்.

அதற்கு துரைமுருகன் ஒரு நகைச்சுவை சொன்னார். அது நேற்று வம்பாகிவிட்டது. உங்கள் பகை கல்லில் விழுந்த பிளவா? தங்கத்தில் விழுந்த பிளவா? என கேள்வி எழுப்பிய கவிஞர் வைரமுத்து.

இவர்களின் பிளவு என்பது தங்கத்தில் ஏற்பட்டது போல நெருப்பு வைத்தால் ஒட்டிக் கொள்ளும். கரகொலி செய்து இருவருக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். பெரியவர்கள் அப்படித்தான். பெரியவர்களின் நட்பு என்பது தண்ணீரில் அன்பு கிழித்தது போல.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 1013

    0

    0