அரசுக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு; மாணவர் சேர்க்கை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்”

Author: Sudha
27 July 2024, 8:30 am

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று தொடங்குகிறது.இந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் www.tngasa.in இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!