பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: பள்ளியில் திடீரென உயிரிழந்த சிறுவன்: பெற்றோர்கள் பகீர் புகார்…!!

Author: Sudha
8 August 2024, 6:21 pm

திருச்சியில் அமைந்துள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன் பள்ளி உணவு இடைவேளையின் போது வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சியில் அமைந்துள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி உணவு இடைவேளையின் போது உணவருந்தி விட்டு வகுப்பறையில் வந்து அமர்ந்தான்.நன்றாக பேசிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு அப்படியே சாய்ந்து தரையில் விழுந்துள்ளார்.

உடன் படிக்கும் குழந்தைகள் அதை கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.உணவு இடைவேளை முடிந்து அடுத்த வகுப்புக்கு ஆசிரியர் வரும்போது மாணவர் கீழே கிடப்பதை கண்டு உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் எங்களுடைய மகனுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனை இருக்கிறது.அதற்காக அவர் மருந்துகள் எடுத்துக் கொண்டார், ஏற்கனவே வலிப்பு ஏற்பட்டுள்ளது. இது பள்ளி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வலிப்பு ஏற்பட்டு சரியான நேரத்தில் கவனிக்காததால் எங்கள் மகனை இழந்து விட்டோம். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிரச்சனை இது என கண்ணீர் மல்க தெரிவித்தனர். வகுப்பறையில் மாணவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 307

    0

    0