உடன் படிக்கும் மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன்: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஷாக்; எதை நோக்கிச் செல்கிறது 2k?

Author: Sudha
2 August 2024, 3:14 pm

இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மிகப் பிரபலம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இன்று நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

நாங்குநேரியில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தகப்பையில் தண்ணீர் சிந்தியதில் ஏற்பட்ட தகராறில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது.இந்த நிகழ்வு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!