நீட் தேர்வில் செம்ம மார்க் பா; ஆனா பிளஸ் டூ துணைத் தேர்வில் தோல்வி; 720 க்கு 705 ஆ…!!

Author: Sudha
2 ஆகஸ்ட் 2024, 8:24 காலை
Quick Share

குஜராத்தை சேர்ந்த ஒரு மாணவி கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 தேர்வுகளை எழுதி இருந்தார்.தேர்வில் அந்த மாணவி இயற்பியல் மற்றும் வேதியியல் என இரு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் ஜூன் மாதம் நடந்த துணைத் தேர்வுகளை எழுதியிருக்கிறார். ஆனால், அந்த தேர்விலும் அவரால் இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த பொது தேர்வில் அவர் இயற்பியல் பாடத்தில் 21 மார்க் மட்டுமே பெற்றார். அதேபோல ஜூன் மாதம் நடந்த மறு தேர்விலும் அவரால் வெறும் 22 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்துள்ளது.

ஆனால் அந்த மாணவி நீட் தேர்வில்720க்கு 705 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவர் இயற்பியலில் 99.89% மதிப்பெண்களும் வேதியியலில் 99.14%, உயிரியலில் 99.14% மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 99.94% மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதன் மூலம் அவரால் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலேயே சேர முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இரண்டு முறை முயன்றும் அவரால் +2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் அந்த மானவியால் கல்லூரியில் சேர முடியாத நிலை உருவாகி உள்ளது.

துணைத் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்களால் அவரது நீட் மார்க் குறித்தும் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் வழக்கு நடக்கும் இந்த சூழலில் இந்த வழக்கைப் புறக்கணிக்க முடியாது. +2 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத மாணவி நீட் தேர்வில் இவ்வளவு அதிக மார்க் பெறுவது சாத்தியமற்றது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

நீட் தேர்வில் 705 மார்க் பெற்ற மாணவி, +2 தேர்வில் தோல்வி அடைந்துள்ள நிகழ்வு நாடு முழுக்க பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

  • Divorce விவாகரத்து வழக்கில் டுவிஸ்ட்.. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் கோர்ட்டில் நடந்த சம்பவம்!!
  • Views: - 166

    0

    0