நடுரோட்டில் ஆசிரியருக்கு கொலை முயற்சி…பள்ளி மாணவன் கத்தியால் வெட்டிய கொடூரம்: விருத்தாச்சலத்தில் பயங்கரம்..!!

விருத்தாச்சலம்: அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையை பள்ளி சீருடையணிந்த மாணவன் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி ரேகா (வயது 42) விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரின் வீடு பள்ளிக்கூடம் அருகேயே இருப்பதால், தினமும் பள்ளிக்கு நடந்தே வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த ஆசிரியை ரேகா, மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு மீண்டும் நடந்து வந்துகொண்டு இருந்த நிலையில், பள்ளி சீருடையணிந்த மாணவன் ஒருவன் நடுரோட்டில் வைத்து ஆசிரியையின் தலையில் பேனா கத்தியால் 3 முறை வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த ஆசிரியை கூச்சலிடவே, பதறிப்போன அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.

இதனைக்கண்ட மாணவன் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், ரேகாவை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆசிரியைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பள்ளிக்கு அருகிலேயே ஆசிரியையை மாணவன் ஒருவர் கத்தியால் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

11 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

12 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

12 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

13 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

13 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

14 hours ago

This website uses cookies.